Saturday, September 17, 2011

தந்தை பெரியாரும் - காயிதே மில்லத்தும்


"இந்த நாடு என் நாடு - நான் பிறந்ததும், மறையப் போவதும் இங்கு தான்" என்பதிலிருந்து பிறப்பதே தேசியம். இந்த ஆணி வேர் நினைவு திடமாய் இருந்ததால், அவரை எந்த சக்தியாலும் கறைப்படுத்திவிட முடியவில்லை. சீர்திருத்த சக்திகளையும், சமூகநீதி கோருபவர்களையும் "தேசத் துரோகி" என்று பட்டம் கட்டி ஒழிக்க பார்ப்பது சகஜம். இதழ் தப்பியவர்கள் இருவர்.

ஒருவர் தந்தை பெரியார்

இன்னொருவர் காயிதே மில்லத்

நேரு உணர்ச்சி வசப்படக் கூடியவர். கபடம் அற்றவர். ஒரு தடவை திராவிட நாடுக் கேட்டப் பெரியாரை, "பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை" அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம். என்று வெடித்தாரோ இல்லையோ - அதே நேரத்தில் அதே சூட்டில் அக்னி கணையை தொடுத்தார் சென்னையிலிருந்து பெரியார்.

யார் மீது?

நேரு மீதே!

என்னை வெளியேற சொல்ல நீர் யாருமையா?

உங்கள் இனம் தான் மதிய ஆசியாவிலிருந்து குடிப் புகுந்த இனம்.

நீங்கள் தான் முதலில் வெளியேற வேண்டும்.

என்று மிளகாய் பொடி அறிக்கை விட்டதை மறக்க முடியுமா? இது எதை காட்டுகிறது. இந்த மண்ணின் மீது பெரியாருக்கு உள்ள பற்றையும், உரிமையையும் காட்டுகிறது. மனதுக்குள் கல்மிஷமோ, கர்வமோ இருந்தால் பிரதமர் நேருவிடமிருந்து வந்த எச்சரிக்கையை பெரியாரை குலை நடுங்க வைத்து இருக்காதா?

இதே போல் ஒரு முறை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட வல்லபாய் படேல் இடமிருந்து எச்சரிக்கை காயிதே மில்லத் அவர்களுக்கு வந்தது. அடுத்தக் கணமே காயிதே மில்லத் மிரட்டலுக்கு அடிப்பணிய மறுப்பதில் பெரியாரானர்.

அழுத்தமான - நாசுக்கான மறுப்புரை தந்து, தாம் யார் என்பதை படேலுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதற்குமே நினைவுப் படுத்தினார். மிரட்டல் வந்தால் இரும்பு உள்ளதை காட்டுவது: நியாயமான முறையில் பேச வந்தால் - நிதானம் காட்டுவது இது காயிதே மில்லத்தின் அபூர்வக் கலை.

இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையே தூபமிட்டு, கலவரத்தை மூட்டிவிட மத வெறியர்கள் சிலர் முயன்ற போதெல்லாம் அது பலிக்காமல் போயிற்று.

1 comment:

ziya said...

பயனுள்ள தகவல்கள் – தொடருங்கள் நண்பரே..

வாழ்த்துக்களுடன்
M.ஜியாவுதீன்(சுவாமிமலை)