
1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஏற்ப்பட்ட அரசியல் புரட்சியின் கதாநாயகர்கள் மூவர். அண்ணா-ராஜாஜி-இஸ்மாயில் சாகிப்.1967 டிசம்பர் இறுதியில் சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க மாநாட்டு மேடையில் வீற்றிருந்தவர்கள் அண்ணா, ராஜாஜி, இஸ்மாயில் சாகிப் ஆகிய மூவர்.
இந்த சேர்க்கையை அண்ணா அழகிய உவமைகயாக்கிப் பேசினார். " லீக், தி.மு.க, சுதந்திரா கட்சிகள் கூட்டு-வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போல என்பதே அந்த உவமை.
பச்சை வெற்றிலை இஸ்மாயில் சாகிப், கருப்பு களிப்பாக்கு அண்ணா, காரமான சுண்ணாம்பு ராஜாஜி. சுண்ணாம்பை அளவறிந்து தடவாவிட்டால் வாய் வெந்து விடும். தாம்பூலம் போடுவதில் சமத்தரான அண்ணா, ராஜாஜியை அளவாக தடவி, சிவக்க செய்து பயன் பெற்றார்.
No comments:
Post a Comment