
(முன்னாள் நீதிபதி எம். எம். இஸ்மாயில் அவர்களின் பார்வையில் காயிதே மில்லத்)
சென்னை குரோம்பேட்டையில் புதுக் குடியிருப்பு இரண்டாவது குறுக்குத் தெருவில் காயிதே மில்லத் வாழ்ந்த இல்லம் "தயா மன்சில்" என்ற பெயருடன் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில், அந்த இல்லத்தைப் பார்த்தவர்கள் அதை ஓர் அரசியல் தலைவருடைய இல்லம் என்று சொல்லவே மாட்டார்கள். அது ஓர் ஏழையினுடைய எளிய இல்லமாகவே இருந்தது.
ஓர் அரசியல் தலைவர் என்பதற்காக, காயிதே மில்லத் அவர்களை காண்பதற்கு இந்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களோ, வெளிநாட்டு பிரமுகர்களோ வந்தால் அவர்களுடைய மரியாதைக்கு ஏற்ப அவர்களை இருக்க சொல்வதற்குத் தகுந்த நாற்காலிகளோ, சோபாக்களோ அங்கு இல்லை. இறுதி வரையில் அவர்களுடைய வாழ்வும் அவர்கள் வாழ்ந்த இல்லமும் எளிமைக்கு எடுத்துக்காட்டாகவே இருந்தன.
அரசியலில் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு எந்த சுகதையுமோ சொத்தையுமோ அவர் தேடிக் கொள்ளவில்லை.
No comments:
Post a Comment