Saturday, August 27, 2011

முஸ்லிம்-தமிழன்-இந்தியன்


முகம்மது இஸ்மாயில் சாகிப் நெல்லை சீமையில் பிறந்தவர். வாக்குச் சாதுரியம் அவர் உடன் பிறந்த சொத்து. தொழிலிலோ வணிகர். இந்த இரண்டுமே பிற்காலத்தில் அவரது அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், தமிழனாகவும், இந்தியனாகவும் வாழ்வதற்கு நாலாப்பக்கமும் ஐயக் கண்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது குற்றங்களுக்கு இடம் தராமல் சிறுபான்மை சமுகத்தின் தலைவர் ஒருவர் நடந்து கொள்வது சாதனையல்லவா ?

அதிலும் தமிழர் ஒருவர் ஓர் அகில இந்திய அரசியல் கட்சிக்குத் தலைவராக கால் நூற்றாண்டுக் காலம் ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் வாழ்ந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேரளாவில் உள்ள மஞ்சேரித் தொகுதியிலிருந்து - தொகுதிக்குப் போகாமலேயே மூன்று முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டது சாதனையிலும் சாதனை அல்லவா?

No comments: