Thursday, August 18, 2011

பணம் வேண்டாம்-தன்மானமே முக்கியம்



அகில இந்திய முஸ்லிம் லீகிற்கு (இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்) அபீப் வங்கியில் 40 லட்ச ருபாய் ரொக்கமாக இருப்பு இருந்தது. பிரிவினைக்குப் பின் இந்தியாவிலுள்ள முஸ்லிம் லீகிற்கு அந்த நிதியிலிருந்து 17 லட்ச ரூபாயை அளிக்க பாகிஸ்தான் தலைவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அத் தொகையைப் பெறுவதற்காகத்தான் இந்தியாவில் முஸ்லிம் லீக் அமைப்பதில் சிலர் தீவிரம் காட்டுகிறார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இரும்பு மனிதர் என்று சொல்லப்பட்ட சர்தார் படேல் அவர்கள் அரசியல் நிர்ணய சபையிலேயே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அச்சமயம் டில்லியில் இராஜாஜி கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தார்.

இராஜாஜி காயிதே மில்லத் அவர்களை, வைசிராய் மாளிகைக்கு அழைத்து கராச்சியிலிருந்து முஸ்லிம் லீகிற்கு வரவேண்டிய பணத்தை பெறுவதற்கு எனது உதவிகள் ஏதேனும் தேவைப்படுமா? என்று கேட்டார்.

அப்போது காயிதே மில்லத் அவர்கள் அளித்த பதில்:

இந்திய முஸ்லிம் லீகிற்கு எந்த வெளிநாட்டில் இருந்தும் ஒரு நயா பைசாக் கூட வாங்கும் என்னும் எங்கள் கட்சிக்கு இல்லை என்று அழுத்தமாக பதில் அளித்தார்.

No comments: