
காயிதே மில்லத் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரியபள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துவதற்காக ஜெயலலிதா 05.06.2013 புதன்கிழமை மதியம் வந்தார்.
காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment